![]() |
தேவ பிள்ளைகளே,
நடப்பது எதுவாயினும்
|
வாழ்வில் மிகப் பெரிய
இராட்சதர்கள் , தேவனுடைய பிள்ளைகளுக்கு விரோதமாக எழும்பி கலங்கடிக்கும் படியாக பல காரியங்களைச்
செய்வர்.யாருக்கும் வராத பிரச்சினைகள், வியாதிகள், மிரட்டல்கள், சமாதான குறைச்சல்கள்
தேவனுடைய பிள்ளைகளைத் தேடி வரும். சிறிய பிரச்சனைகளை சந்திக்கவே மனிதர்கள் தடுமாறும்
போது, மிகப் பெரிய பிரச்சினைகளும், எதிரிகளும் தேவனுடைய பிள்ளைகள் மீதும் மோதி அடிக்கும்
போது, ஆரம்பத்தில் நிலைகுலைந்து போவது மிக சகஜமான காரியமே.
ஆனால், மேலே இருந்து நம்மைக் காண்கின்ற தேவனோ நமக்கு இதை விட மிக௪் சிறப்பானவைகளை ஏற்கனவே ஆயத்தப்படுத்தி இருக்கின்ற படியினால் நமது திட்டங்களை முழுவதும் நிராகரிக்கின்றார். அது அப்போது வேதனையை ஏற்படுத்தினாலும், தேவன் அதைக் குறித்து கவலைப்படாதபடி தொடர்ந்து தன்னுடைய சித்தத்தை நம் வாழ்வில் நிறைவேற்றுகிறார்.
நாமும் காலங்கள் ௪ெல்ல ௪ெல்ல பக்குவம் ௮டைந்து தேவன் நம்மை நடத்தும் போது விட்டுக் கொடுக்கின்றவர்களாக மாறுகிறோம். அவரோடு கூட போராடுவதில்லை. நாம் ஒவ்வொரு அடியையும் தேவனின் சித்தத்தின் படியே வைக்கின்றோம். அவர் செயல்பட நாம் அனுமதி கொடுக்க வேண்டும். அப்போது தேவன் நம்மில் அதிகம் பிரியப் படுவார்.
யோசேப்பு தன்னை அதிகமாய் நேசித்த தகப்பனோடு கூடவே கடைசிவரை இருக்க ஆசைப்பட்டான். ஆனால் காரியங்களோ நேர் எதிர்மாறாக நடந்தன.
1. அண்ணன்மார்களின் கோபமும், பொறாமையும் தகப்பனினிடம் இருந்து பிரித்து எகிப்திற்கு அடிமையாக போக வைத்தன.
2. ஆசைக்கு உடன்படாததால் போத்திபார் மனைவியின் கோபம் சிறைச்சாலைக்குள் போக வைத்தன.
3. நண்பனாகிய பான பாத்திரக்காரனின் நன்றி கெட்ட குணமும், மறதியும் யோசேப்பின் சிறைச்சாலை வா௪த்தின் காலத்தை அதிகரித்தன.
இப்படியாக பல்வேறு வழிகளில் யோசேப்பு மிகவும் நெருக்கப்பட்டு பிரயாணம் பண்ணிக் கொண்டே இருந்தான். ஆனால், இறுதியில் தேசத்தின் ராஜாவாகிய பார்வோனின் கண்களில் ஆண்டவரின் கிருபையினால் தயவு கிடைத்து, மொத்த எகிப்து தேசத்திற்கும் அதிபதியான போதுதான்... தேவன், தன்னுடைய ௪ித்த்தத்தின்படி ௭வ்வளவு அழகாக நடத்தியிருக்கிறார் என்பதை அவன் புரிந்து கொண்டிருப்பான். ஆண்டவரை துதித்துக்கொண்டே இருந்திருப்பான்.
தேவ பிள்ளைகளே, நடப்பது எதுவாயினும் நிலைப்பது நன்மையிலே..துக்கம் உன்னைச் சூழும் நேரம், கவலை விடு, வேதம் எடு, முழங்கால் இடு, வெற்றி உன்னோடு. துக்கம் தூரமாகும் தூயவரின் துணையோடு...
