வேதம் சொல்வதையும் விடாதிருங்கள்.
(1) மருத்துவம் சொல்வது: முகம் மற்றும் கைகால்கள் சோப்பினால் கழுவப்படவேண்டும்
வேதம் சொல்வது: பாவங்கள் இயேசுவின் இரத்தத்தால் கழுவப்படவேண்டும் (1யோவான் 1:7)
(2) மருத்துவம் சொல்வது: வீட்டுக்குள் அடங்கியிருங்கள்
வேதம் சொல்வது: தேவனுடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள் (1 பேதுரு 5:6)
(3 மருத்துவம் சொல்வது: வியாதியஸ்தரிடம் தள்ளியிருங்கள்
வேதம் சொல்வது: உலகத்திடம் இருந்து தள்ளியிருங்கள் (யாக்கோபு 4:4)
(4) மருத்துவம் சொல்வது: மருத்துவரின் அறிவுரைகளை கைக்கொள்ளுகிற மனுஷன் கொரோனாவால் பாதிக்கப்படாமல் பிழைப்பான்
வேதம் சொல்வது: தேவனுடைய வார்த்தைகளைக் கைக்கொள்ளுகிற மனுஷன் சாகாமல் பிழைப்பான் (லூக்கா 4:4)
(5) மருத்துவம் சொல்வது: முகக்கவசத்தை அணிந்து கொள்ளுங்கள்
வேதம் சொல்வது: விசுவாசம், அன்பு எனும் மார்க்கவசத்தை அணிந்துகொள்ளுங்கள் (1தெசலோனிக்கேயர் 5:8)
(6) மருத்துவம் சொல்வது: இருமல், சளி, காய்ச்சல் இருந்தால் மருத்துவரிடம் செல்லுங்கள்
வேதம் சொல்வது: பிரச்சனை, துன்பம், போராட்டம் இருந்தால் ஆண்டவரிடம் செல்லுங்கள் (மத்தேயு 11:28)
(7) மருத்துவம் சொல்வது: உடலை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்
வேதம் சொல்வது: உடலை பரிசுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள் (1 தெசலோனிக்கேயர் 4:5)
(8) மருத்துவம் சொல்வது: நோய் தொற்றியிருந்தால் பயப்படாதீர்கள்
வேதம் சொல்வது: கர்த்தர் கூட இருக்கிறார்... பயப்படாதீர்கள் (ஏசாயா 43:5)
(9) மருத்துவம் சொல்வது: பிறரிடம் கைக்கொடுப்பதை தவிருங்கள்
வேதம் சொல்வது: தேவன் பொல்லாதவர்க்கு கைக்கொடுப்பதில்லை (யோபு 8:20)
(10) மருத்துவம் சொல்வது: மற்றவர்களிடமிருந்து தள்ளியிருக்க வேண்டும்
வேதம் சொல்வது: அந்தகாரத்தின் கிரியைகளை தள்ளிவிடவேண்டும் (ரோமர் 13:12)
(11) மருத்துவம் சொல்வது: அவசியமற்ற பிரயாணத்தை தவிர்ப்பது நல்லது
வேதம் சொல்வது: அவசியமற்ற பேச்சுக்களைக் (ஆகாத சம்பாஷனைகள்) தவிர்ப்பது நல்லது (1 கொரிந்தியர் 15:33)
(12) மருத்துவம் சொல்வது: நோய் பாதிக்கப்பட்டவரிடம் இருந்து விலகியிருங்கள்
வேதம் சொல்வது: மாறுபாடான சந்ததியைவிட்டு விலகியிருங்கள் (அப்போஸ்தலர் 2:40)
(13) மருத்துவம் சொல்வது: அசுத்தமான கைகளால் கண் மூக்கு வாய் காது போன்றவற்றை தொடாதிருங்கள்
வேதம் சொல்வது: நீங்கள் அசுத்தமானதைத் தொடாதிருங்கள் (2 கொரிந்தியர் 6:17)
(14) மருத்துவம் சொல்வது: நோயாளி மருந்துகளால் குணமாவான்
வேதம் சொல்வது: விசுவாசி இயேசுவின் தழும்புகளால் குணமாவான் (1 பேதுரு 2:24)
(15) மருத்துவம் சொல்வது: மருத்துவரின் அறிவுரைகளை கைக்கொள்ளுங்கள்
வேதம் சொல்வது: என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள் (யோவான் 14:15)
(16) மருத்துவம் சொல்வது: சிகிச்சையினாலே நோயாளி பிழைப்பான்
வேதம் சொல்வது: விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் (எபிரேயர் 10:38)
நிதம் அமர் அவர் பாதம். வராது உனக்கு சேதம்.