![]() |
பெரும்பான்மையான ஜனங்கள் தங்களுக்கு கிடைத்த விலையேறப் பெற்ற அழைப்பை வீண் அடிப்பவர்கள் ஆக இருக்கின்றார்கள். தெரிந்து கொள்ளப்பட்ட, உற்சாகமாக ஓடுகின்ற தேவ பிள்ளைகளை எப்படியாவது தள்ளி விட வேண்டும் என்று சத்துரு இடைவிடாமல் செயல்படுகிறான். நிற்பதாய் நினைக்கின்ற நாம் கவனமாய் இருக்கும்படியாக அழைக்கப்படுகிறோம்.
பிரச்சனைகளும், போராட்டங்களும் ஊழியத்தின் பாதையில் வரும்போது சோர்ந்து போகாதீர்கள். தோல்விகள், ஏமாற்றங்கள், துரோகங்கள், அவமானங்கள் இவை அனைத்தும் தேவனுடைய பிள்ளைகள் நிச்சயமாகவே கடந்து செல்ல வேண்டிய அவசியமான மற்றும் ஆசீர்வாதத்திற்கான பாதை. 'தேவனே நிற்க பலன் கேட்கின்றேன்' என்று உதவி கேட்கும் போது நிச்சயம் ஆண்டவர் உதவி செய்வார்.தூக்கி எடுப்பார்.
பேதுரு வித்தியாசமான சீஷன். தண்ணீரின் மேல் நடந்த ஆண்டவரை கண்டு ஏனைய சீஷர்கள் ஆவேசம், பேய் என்று அலறினார்கள். இவன் மாத்திரம் ஆண்டவரிடத்தில் அனுமதி கேட்டு அவரை போலவே தண்ணீரில் நடந்தான், சரித்திரம் படைத்தான்.
சிறிது தூரம் நடந்து சென்ற பிறகு ௮வன் கண்கள் அலைகளையும் காற்றையும் கண்ட போது பயந்து போனான். மூழ்க ஆரம்பித்தான். "ஆண்டவரே காப்பாற்றும்'' என்று கதறிய போது அவர் அவனைத் தூக்கி எடுத்தார். கடைசி வரைக்கும் தண்ணீரில் மேல் நடக்க அவனால் முடியவில்லை. ௮ப்படி ௪ெய்திருந்தால் எவ்வளவோ நலமாக இருந்திருக்கும்.
தேவ பிள்ளைகளே,கருவறையில் கண்டவர் கல்லறை வரையுலும் கைவிடாது கரை சேர்க்க வல்லவர். சில்லரைகளும் சிற்றின்பங்களும் சிதைத்துவிடுமே தவிர, சிறப்பைத் தராது.
இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன். (1 கொரிந்தியர் 10:12)
