Saturday, May 16

மோசே இடம் காணபட்ட நல்ல குணங்கள்


மோசேவிடம் காணபட்ட நல்ல குணங்கள் என்னெ்ன தெரியுமா?

         1)  மிகுந்த சாந்தமுள்ளவர் – (எண். 12:3)

         2)  உண்மையுள்ளவர் – (எபி 3:2)

         3)  விசுவாசத்தில் பெரியவர் – (எபி 11:24)

         4)  தாழ்மையுள்ளவர் (நான் எம்மாத்திரம்) – (யாத் 3:11, 4:19)

         5)  துன்பத்தை அனுபவிப்பதையே தெரிந்து கொண்டவர் – (எபி 11:26)

         6)  கர்த்தரை நோக்கி ஜெபிக்கிறவர் – (யாத் 32:13)

         7)  தேவ சமுகத்தில் இருந்த போது முகம் பிரகாசித்தது – (யாத் 34:28-33)

         8)  கர்த்தர் தனக்கு கற்பித்த படியெல்லாம் செய்தவர் – (யாத் 40:1-38)

         9)  செய்கையிலும், வாக்கிலும் வல்லவர் – (அப் 7:22)

         10)  புசியாமலும் குடியாமலும் 40 நாள் (2 முறை) உபவாசம் இருந்தவர் – (யாத் 34:28-30)

         11)  கிருபை பெற்றவர் – (யாத் 33:17)

         12)   தேவனிடத்தில் நற்சாட்சி பெற்றவர் – (எண் 12:7,8,3)

         13)  கை சுத்தமாயிருந்தவர் (பரிசுத்தவான்) – (எண் 16:14,15)

         14)   மகிமையின் பிரகாசத்தால் மூடப்பட்டார் – (யாத் 24:15-18)

         15)  கர்த்தர் சத்தம் கேட்டு நடுங்கினார் (தேவ பயம் காணப்பட்டது) – (அப் 7:32)

         16)  தனக்கு விரோதமாக பேசின மிரியாமை மன்னித்து அவளுக்காக ஜெபித்தவர் – (எண் 12:13)

         17)  உலக மேன்மையை வெறுத்தவர் (பார்வோன் குமாரத்தியின் வளர்ப்பு மகன்) – (எபி 11:24)

         18)  அநித்தியமான பாவ சந்தோஷங்களை வெறுத்தவர் – (எபி 11:25)

         19)  இனி வரும் பலன் மேல் நோக்கமாக இருந்தவர் – (எபி 11:26)

         20)  கிறிஸ்துவின் நிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியம் என்று எண்ணினவர் – (எபி 11:26)