மோசேவிடம் காணபட்ட நல்ல குணங்கள் என்னெ்ன தெரியுமா?
1) உண்மையான, முழுமையான, முடிவு வரைக்கும் கீழ்ப்படிந்தார். – (யாத் 3:4)
2) எதிலும், எப்போதும் தாழ்மையாக நடந்து கொண்டார். – (யாத் 3:11)
3) உண்மையாக இருந்து கிறிஸ்துவின் அடையாளமானார். – (எபி 3:2|எண் 12:7)
4) ஜெபத்தில் உறுதி உள்ளவர் & தேவ சமூகத்தில் காத்திருப்பதில் பிரியம் கொண்டார். – (யாத் 34:28)
5) மிகுந்த பாடுகளின் மத்தியிலும் விசுவாசத்தை மறுதலிக்காது காத்துக்கொண்டார். – (எபி 11:24-27)
6) சாந்தகுணம் உள்ளவராக அதாவது நிதானத்தை எந்த நிலையிலும் இழக்கவில்லை. – (எண் 12:3)
7) தேவனுக்காக எகிப்தின், சகல மேன்மைகளையும் வெறுத்துவிட்டவர். அவரது கண்கள் கண்டது ஆஸ்திகளை அல்ல. ஆண்டவரை மட்டுமே. – (எபி 11:24-27)
8) நான் மோசேயோடு இருந்தது போல உன்னோடும் இருப்பேன். – (யோசு 1:5)
இது போன்ற காரியங்களை நாமும் செய்யும் பொழுது மோசேயோடு இருந்த கர்த்தர், நம்மோடும் இறுதிவரை உறுதியாக உடனிருந்து இருந்து நடத்துவார். மேன்மை படுத்துவார்.