Tuesday, June 23

பேசக்கூடாத பேச்சுகள்


   மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்க வேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். – (மத்தேயு 12:36)

  தேவ பிள்ளைகளே, நியாயத்தீர்ப்பில் தப்பிக்க வேண்டுமானால் நாம் பேசும் வார்த்தைகள் கூட கிறிஸ்து இயேசுவுக்கு ஏற்றதாய் இருக்கவேண்டும்.

  *பரிசுத்த வேதம் போதிக்கும் "பேசக்கூடாத பேச்சுகள்"*

         1)  பெருமையான வார்த்தைகளை பேசக்கூடாது. – (யாக்கோபு 3:5)

         2)  மேட்டிமையான மற்றும் அகந்தையான வார்த்தைகளை பேசக்கூடாது. – (1சாமுவேல் 2:3)

         3)  வம்பு வார்த்தைகளை பேசக்கூடாது. – (சங்கீதம் 75:4)

         4)  அதிகமான வார்த்தைகளை பேசக்கூடாது. – (மத்தேயு 5:37)

         5)  கிழவிகளின் கட்டுக்கதைகளை பேசக்கூடாது. – (1 தீமோத்தேயு 4:7)

         6)  வீணான பேச்சுகளை பேசக்கூடாது. – (மத்தேயு 12:36)

         7)  கடுஞ் சொற்களான வார்த்தைகளை பேசக்கூடாது. – (நீதிமொழிகள் 15:1)

         8)  நம்மை நாமே புகழ்ந்து பேசக்கூடாது. – (நீதிமொழிகள் 27:2)

         9)  நாம் செய்த காரியங்களை நாமே புகழ்ந்து பேசக்கூடாது – (நீதிமொழிகள் 20:6)

         10)   தீமையை பேசக்கூடாது. – (யோபு 27:3)

         11)  துர்ச் செய்தியை பேசக்கூடாது. – (எண்ணாகமம் 13:33)

         12)  வம்பு வார்த்தைகளை பேசக்கூடாது. – (எபேசியர் 5:4)

         13)  புத்தியீனமானவைகளை பேசக்கூடாது – (எபேசியர் 5:4)

         14)  யாரையும் பரியாசம் பண்ணிப் பேசக்கூடாது – (எபேசியர் 5:4)

         15)  யாரையும் சபித்தல் கூடாது – (யாக்கோபு 3:10)

         16)  மற்றவர்கள் மனதை புண்படுத்தும் வார்த்தைகளை பேசக்கூடாது – (நீதிமொழிகள் 12:18)

         17)  இறுமாப்பான வார்த்தைகளை பேசக்கூடாது – (யூதா 16)

         18)  கோள் செல்லுதல் கூடாது. – (லேவியாகமம் 19:16)

         19)  நாவினால் புறங்கூறுதல் கூடாது – (சங்கீதம் 15:3)

         20)  பிரயோஜனமில்லாத வார்த்தைகளை பேசக்கூடாது – (யோபு 15:3)

         21)  தர்க்கத்தை உண்டு பண்ணும் வார்த்தைகளை பேசக்கூடாது – (யோபு 15:3)

         22)   கபடான வார்த்தைகளை பேசக்கூடாது – (சங்கீதம் 120:2,3)

         23)  கடினமான வார்த்தைகளை பேசக்கூடாது – (சங்கீதம் 94:4)

         24)  கசப்பான வார்த்தைகளை பேசக்கூடாது – (சங்கீதம் 64:4)

         25)  தகாத காரியங்களை பேசக்கூடாது – (1 தீமோத்தேயு 5:13)

         26)  மற்றவர்களை குற்றவாளியாக தீர்த்து பேசக்கூடாது – (ரோமர் 2:1)

         27)  இச்சையான வார்த்தைகளை பேசக்கூடாது – (1 தெசலேனிக்கேயர் 2:5)

         28)  பதற்றமுள்ள வார்த்தைகளை பேசக்கூடாது – (நீதிமொழிகள் 29:20)

         29)  தந்திரமான வார்த்தைகளை பேசக்கூடாது – (2 பேதுரு 2:3)

         30)  விரோதமான பேச்சுகளை பேசக்கூடாது – (3 யோவான் 10)

         31)  மாயையைக் குறித்து பேசக்கூடாது – (சங்கீதம்144:8 )

         32)  ஆகாத சம்பாஷணைகள் கூடாது – (1 கொரிந்தியர் 15:3)

         33)  பொய்யான வார்த்தைகளை பேசக்கூடாது – (சங்கீதம் 54:4)

         34)   இச்சகம் பேச வேண்டாம் (சங்கீதம் 12: 3)

         35)  கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்பட வேண்டாம் (எபேசியர் 4: 29))

         36)  கள்ள நாவில் பேச வேண்டாம் – (சங்கீதம் 109: 2)

         37)  மாயையாய் பேச வேண்டாம் (சங்கீதம் 144:8)

         38)  ஒருவருக்கொருவர் விரோதமாய் பேசாதிருங்கள் (யாக்கோபு 4:11)

  *அப்படியானால் எதைத்தான் பேசவேண்டும்?*

         1)  கர்த்தர் செய்த அதியசங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள். (1 நாளாகமம் 16:9)

         2)  பிறனோடே உண்மையைப் பேசுங்கள். (சகரியா 8:16)

         3)  பக்திவிருத்திக்கு ஏதுவான நல்லவார்த்தைகள் உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள். (எபேசியர் 4:29)

         4)  ஞானத்தைப்பேசுங்கள் (சங்கீதம் 49: 3)

         5)  யதார்த்தமாய் பேசுங்கள் (சங்கீதம் 52: 3)

         6)  நீதியை பேசுங்கள் (சங்கீதம் 58: 1)

         7)  கர்த்தருடைய சாட்சிகளைக் குறித்து, ராஜாக்களுக்கு முன்பாக வெட்கப்படாமல் பேசுங்கள் (சங்கீதம் 119: 46)

         8)  மேம்படான காரியங்களை பேசுங்கள் (நீதிமொழிகள் 8: 6)

         9)  சுவிஷேசத்தை குறித்து பயப்படாமல் பேசுங்கள் (அப்போஸ்தலர் 18: 9)