![]() |
பொது காரியங்களில் ஈடுபட வேண்டும், அநேகருக்கு உதவிச் செய்ய வேண்டும் என்கின்ற நல்லண்ணங்களும் கூடவே வரும். இவையாவும் நிச்சயமாக வரவேற்கப்பட வேண்டியவைகளே. இவையாவற்றையும் நமக்கு கொடுத்து அழகு பார்க்கின்றவர் நம்முடைய ஆண்டவரே. ஆனால் அதே சமயம் வெற்றியின் படிக்கட்டுகளில் உச்சத்தில் நிற்கின்ற அந்த நேரங்களில் ஒவ்வொரு செயலில் ஈடுபடுவதற்க்கு முன்னும் ஆண்டவரின் அனுமதியைப் பெற்று அதன் பின்னரே நம்முடைய கைகளை உதவி செய்யும் படியாக நீட்ட வேண்டும்.
மாம்சீகம் செயல்பட அனுமதிக்க கூடாது. வேகமும், கோபமும் அதன் விளைவாக எடுக்கின்ற முடிவுகளும், உபயோகப் படுத்துகின்ற வார்த்தைகளும் மாபெரும் அழிவைக் கொண்டு வரும்.
அவசரப்பட்டு செய்கின்ற ஒரே ஒரு காரியம் தேவன் நமக்கு கிருபையாய் கொடுத்திருக்கும் அத்தனை ஆசீர்வாதங்களையும் நம்மிடம் இருந்து பிடுங்கி விடும். அரண்மனையிலிருந்து துரத்தப்பட்டு மிக சாதாரணமான, கடினமான வாழ்க்கையை வாழவேண்டிய சூழ்நிலை உருவாகும். அப்போது தான் தேவன் என்னை கடந்த காலங்களில் எவ்வளவு ஆசீர்வதித்திருக்கின்றார். ஐயோ! நான் அதை அறியாமல் போய் விட்டேனே என்று எண்ணி எண்ணி வருந்துவோம்.
மோசே வாலிப வயதில் அனைத்து கலைகளையும் கற்றுத் தேர்ந்து, வாக்கிலே வல்லவனாக இருந்து ராஜாத்தியுடைய குமாரனாக, செல்வச் செழிப்பாக இருந்தார். இஸ்ரவேல் ஜனங்களை எப்படியாவது விடுவிக்க வேண்டும் என்கிற நல்ல எண்ணம் அவருக்கு இருந்தது. ஏராளமான வேகமும், முன்கோபமும் அவருக்குள்ளாக இருந்தது. அதன் விளைவாக மாம்சீகத்தில் கொலை செய்கின்றார். அது வெளிப்பட்டப் போது பயந்து அரண்மனையை விட்டு ஓடுகின்றார்.
நாற்பது வருடங்கள் வனாந்தரத்தில் ஆடு மேய்க்கின்றார். செய்த தவறை நினைத்து நித்தம், நித்தம் நிச்சயமாக வ௫ந்தியிருப்பார். அதற்க்குள்ளாக கிழவனாகிவிட்டார், பல வருடங்கள் வந்து போய்விட்டது இறுதியில் தேவன் அவனை கிருபையாய் உயர்த்துகின்றார்.
நண்பனே, வேகம் இல்லாத விவேகம் கோழைத்தனம். விவேகம் இல்லாத வேகம் மூடத்தனம். இவை இரண்டுமே வீண்தான் என வேதம் கூறுகிறது.
... மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே.. (யாக்கோபு 1:20)
ஆகையால் நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால்,
உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்: அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார் (நீதிமொழிகள் 3: 5,6)
நண்பா வேதம் கூறுகிறது அன்பா. இதை ஏற்றுக்கொள் பண்பா.
