(GREATER PEOPLE) இவர்கள், அதிக எண்ணிக்கையில் ஜனங்களை கொண்ட ஜாதியார் . இஸ்ரவேலரைப் பார்க்கிலும் ஜனம் பெருத்த ஜாதிகள்/
1) ஏத்தியர்(Hittites): இவர்கள் கானான் குமாரனான ஏத்தின் சந்ததியார் . ( ஆதி 10.15 ; 23 : 3-18 ; ஆதி 27:46 ; ஆதி 49:32 ) ஆபிரகாமின் காலத்திலிருந்தே இவர்கள் பலவான்களாக இருந்தார்கள் . அசீரிய சாம்ராஜ்யம் , பாபிலோனிய சாம்ராஜ்யம் ஆகியவை தோன்றும் வரையிலும் ஏத்தியர் வல்லமை பொருந்தியவர்களாக இருந்தார்கள் . ஏத்தியரின் தேசத்தைக் கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுத்தார் . யோசுவா இந்தத் தேசத்தை முதலாவதாகப் பிடித்தார் . ( உபா 7.1 ; யாத் 3 : 8 ; யோசு 1 : 4 ; யோக 9.1-12 : 24 ) , தாவீதின் சேனையில் ஏத்தியருடைய பிரதானிகளில் சிலர் பணிபுரிந்தார்கள் . { 2 சாமு 11 : 3 ; 2 சாமு 23:39 ) . சாலொமோனிடத்திலும் சில ஏத்தியர்கள் வேலை பார்த்திருக்கிறார்கள் . { 1 இராஜா 9 : 20-21 ) வடக்கு சீரியாவிலும் , மேலும் பல பகுதிகளிலும் ஏத்தியருக்கு ராஜாக்கள் இருந்தார்கள் . ( 1 இராஜா 10:29 ; 2 இராஜா 7.5 ; 2 நாளா 117 ) . நேபுகாத்நேச்சாரின் காலத்தில் அவர்களுடைய வல்லமை
முழுவதுமாக அழிக்கப்பட்டது .
2) கிர்காசியர்(Girgashites): இவர்கள் கானானின் சந்ததியார் . (ஆதி 10.16 ; ஆதி 15:21 ; யோசு 3.10 ; யோசு 24:11 ; சங் . 9 : 8 ) .
3) எமோரியர்(Amorites): இவர்கள் கானானின் சந்ததியார் . ( ஆதி 10.15-16 ; 1 நாளா 1.13-14 ) . இவர்களில் சிலர் இராட்சதர்களாக இருந்தார்கள் . ( ஆமோஸ் 29 ) கெதர்லா கோமேர் இவர்களை முறியடித்தார் . ஆபிரகாம் . இவர்களை மீட்டுக் கொண்டர் . ( ஆதி 14 ) . இவர்களுடைய தேசம் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது . ( ஆதி 14 : 7 ; ஆதி 15:21 ; ஆதி 48:22 ; எண் 13:29 ; எண் 21:13 ; எண் 32 : 33-42 ; யோசு 3:10 ; யோசு 5 : 1 ; யோசு 12 : 2-3 ; யோசு 13.15-21 ; நியா 1 : 35-36 ; நியா 11 : 22-23 ) .
4) கானானியர்(Canaanites): இந்த வார்த்தை கானான் தேசத்தில் குடியிருப்பவர்களுக்கும் , கானானின் சந்ததியான பதினொறு தேசங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது . ( ஆதி 10.15-19 ) இந்த வசனத்தில் கானானியர் என்னும் வார்த்தை கானான் தேசத்தில் குடியிருக்கும் மற்ற ஜாதிகளைப் போல ஒரு தனி ஜாதியைக் குறிப்பிடுகிறது .
5) பெர்சியர்(Perizzite): இந்த வார்த்தைக்கு நாட்டுப்புறத்தில் வசிக்கிறவர் என்று பொருள் . இவர்களும் கானானியரோடு சேர்த்திருந்தார்கள் . ( உபா 7.1 ; ஆதி 13 : 7 ; ஆதி 34:30 ; நியா 1 : 4 )
6) ஏவியர்(Hivites): இவர்கள் கானானின் சந்ததியார் . ( ஆதி 10.17 ; 1 நாளா 1.15 ) சீகேமியர் , கிபியோனியர் ஆகியோர் ஏவியர் ஆவார்கள் . ( ஆதி 32 : 2 ; யோசு 9.7 ; யோசு 11:19 ) இவர்களுடைய தேசம் இஸ்ரவேலருக்குக் கொடுக்கப் பட்டிருக்கிறது . ( உபா 7.1 ; உபா 20.17 ; யாத் 23 , யாத் 28 ; நியா 3 : 5 ) , யோசுவா இவர்களை ஜெயித்தான் . ( யோசு 9.1 ; யோசு 12 : 8 ; யோசு 24.11 ) பிற்காலத்தில் இவர்கள் சாலொமோனுக்குப் பணிவிடை செய்தார்கள் . ( 1 இராஜா 9:21 ; 2 நாளா 8 : 8 ).
7) எபூசியர்(Jebusites): இவர்களும் கானானின் சந்ததியார் . ( ஆதி 10.16 ; நாளா 1.14 ). இவர்கள் எபூஸ் Jebus ) பட்டணத்தைச் சுற்றிலும் வசித்தவர்கள்(இந்தப் பட்டணம்தான், பிற்காலத்தில் எருசலேம் என்று அழைக்கப்படுகிறது.) ( நியா19.10-11 ; 1 நாளா 11 : 4-5 )
ஆனால், கொஞ்சமாக இருந்த இஸ்ரவேலர் தான் தேவனுக்கு பிரியமானவர்களாக தெரிந்து கொள்ளப் பட்டனர்!