புத்தியுள்ள ஸ்திரீகள் பிறப்பதில்லை.உருவாக்கப்படுகிறார்கள் அல்லது உருவாகுகிறார்கள்
புத்தியுள்ள ஸ்திரீயாக உருவாக என்ன செய்வது?.
1) வேதம்: கர்த்தருடைய வேதம் பேதையை ஞானியாக்குகிறது. எனவே வேதத்தில் நாம் அதிக நேரம் செலவிட வேண்டும்.(சங் 19:7)
2) ஜெபம்: நாம் கர்த்தரிடத்தில் ஜெபிக்கும் போது. ஞானத்தை கேட்கும் போது நமக்கு ஞானத்தை தந்தருள்வார்.(யாக் 1:5)
3) தேடுதல்: உள்ளான ஆர்வத்தோடு தேடும் போது ஞானம் கிடைக்கும்.(நீதி 2:3)
4) சம்பாதி: நாம் அதிகமாக பிரயாசப்பட்டு ஞானத்தை சம்பாதிக்க வேண்டும்.(நீதி 4:7)
புத்தியுள்ள ஸ்திரீ என்ன செய்கிறால்?.
வீட்டைக் கட்டுகிறாள்.வீடு என்பது நமது குடும்பத்தை, நமது சந்ததியைக் குறிக்கிறது. – (ஆதி 7:1, ரூத் 4: 11)
புத்தியுள்ள ஸ்திரீ தன் கணவர், பிள்ளைகளுடைய ஆவிக்குரிய வாழ்வைக் கட்டக் கூடிய சகோதரியாய் அவர்கள் கர்த்தரை தேடுவதற்கு வாய்ப்புகளை உருவாக்கி தரக் கூடிய புத்தியுள்ள சகோதரியாய் இருக்க வேண்டும்.