
அழைப்பா?... அல்லது பிழைப்பா?...
1.தேவ அழைப்பை பெற்றவர், மனித அழைப்பை தேடி ஓட மாட்டார்; மனித அழைப்புக்காக ஓடுகிறவர், தேவ அழைப்பில் நிலைக்க மாட்டார்.
2. ஓயாமல் ஓடிக்கொண்டே மட்டும், இருப்பவர் கிறிஸ்துவின் ஊழியக்காரர் அல்ல; ஓடிக்கொண்டே இருந்தாலும், கிறிஸ்துவின் மார்பில் சாய்ந்து கொண்டே மற்றும் கிறிஸ்துவை மட்டுமே சார்ந்து கொண்டே, இருப்பவரே கிறிஸ்துவின் ஊழியக்காரர்.
3. அடுத்தது எந்த மனிதனை பார்க்கலாம் என்பது அழைப்பல்ல; அடுத்து நான் யாரை பார்க்க வேண்டும் என்று, தேவ சமூகத்தில் காத்திருப்பதே அழைப்பு.
4. மனிதனுக்கு ஏற்றபடி வளைந்து வாழ்வது, அழைப்பு அல்ல; தேவனுக்கு ஏற்றபடி பணிந்து வாழ்வதே, அழைப்பு.
5. தேவனால் நான் கனப்பட வேண்டும், மகிமைப்பட வேண்டும் என்பது அல்ல அழைப்பு; என்னால் தேவன் கனப்பட வேண்டும், மகிமைப்பட வேண்டும் என்பதே அழைப்பு.
6. நான் யார் என்று மக்கள் அறிய வேண்டும், என்பதற்காக உழைப்பது அல்ல அழைப்பு; தேவன் யாரென்று மக்கள் அறிய வேண்டும், என்பதற்காக உழைப்பதே அழைப்பு.
7. கர்த்தாவே, என் சித்தம் நிறைவேற்றும் என்பது அல்ல அழைப்பு; உம் சித்தம் என்னில் நிறைவாகட்டும், என்பதே அழைப்பு.
8. தனக்கான அடையாளத்தை, மண்ணில் பதிப்பது அல்ல அழைப்பு; தேவனுக்கான அடையாளத்தை, மண்ணில் விதைப்பதே அழைப்பு.
9. விரல் தேய தேய உழைப்பது அல்ல, (IN MEDIA ONLY)அழைப்பு; முழங்கால் தேயத் தேய ஜெபிப்பதும்; குதிங்கால் நோக நோக உழைப்பதும் தான் அழைப்பு.
10. அழைப்பை மட்டுமே பார்க்கும் கண்களுக்கு, பிழைப்பு தெரியாது; பிழைப்பை மட்டுமே பார்க்கத் தெரியும் கண்களுக்கு, அழைப்பு தெரியாது.
11. ஆகையால், இழிவான பிழைப்புக்காக நாடாமல், அழைப்புக்காக, இறுதிவரை உறுதியாக தனித்து நின்றாலும், துணிந்து நிமிர்ந்து நின்று பார்.
12. நீங்கள் நடந்து திரியும் இந்த வனாந்தரத்திலும் தண்ணீர் சுரந்து வரும்; உங்கள் தலைக்கு மேல் பறந்து திரியும் காகமும் அப்பம் தரும்.
மேசியாவின் ஊழியங்கள்
+91-80724 87255