Saturday, October 26

ஒரு Google Map ஆக இருப்பவரா நீங்கள்?... |Thinking Drops @Messiah Ministries

Top ஆக இருக்க Map ஆக இருங்கள்



 நீங்கள் Google Map உதவியுடன் 

செல்லும் போது வழி தவறினால், 

Google Map உங்களை கண்டிக்கவோ 

அல்லதுதிட்டுவதோ கிடையாது  

என்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா?


ஒருபோதும் அது உங்களுக்கு எதிராக குரல் உயர்த்தி  , “நீங்கள் இடதுபுறம் திரும்பி இருக்க வேண்டும், முட்டாள்! இப்போது நீங்கள் மிக நீளமான பாதையில் செல்ல வேண்டியிருக்கும், இது உங்களுக்கு அதிக நேரத்தையும் எரிவாயையும் செலவழிக்க வைக்க போகிறது, மேலும் நீங்கள் சந்திப்பிற்கு தாமதமாக போவீர்கள்’ என்று கத்துவதில்லை.


அப்படிச் செய்திருந்தால், நீங்கள் அதைப் பயன்படுத்துவதை நிறுத்தி இருப்பீர்கள், மாறாக, அது மீண்டும் வழியமைத்து, நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு உள்ள அடுத்த சிறந்த வழியைக் காண்பிக்கும்.


நீங்கள் செல்ல விரும்பும் இடத்தை  அடையச் செய்வதே அதன் முதன்மையான நோக்கமே தவிர, தவறு செய்ததற்காக உங்களை வருத்தப்பட வைப்பது அல்ல.


இதில் ஒரு சிறந்த பாடம் உள்ளது.


தவறு செய்தவர்கள் மீது, குறிப்பாக நமக்கு நெருக்கமாக இருப்பவர்கள் மீது எப்போதும் நமது விரக்தியையும், கோபத்தையும், எரிச்சலையும், கசப்புக்களையும் இறக்கி வைப்பது உண்டு.


அதனால் என்ன பயன். ஒரு பிரச்னையை எதிர்கொண்டால் அதை சரி செய்ய முனைய வேண்டுமே தவிர பிறரை பழி சொல்வதை முதலில் நிறுத்த  வேண்டும்.


உங்கள் குழந்தைகள், மனைவி, குடும்ப உறவுகள், சக பணியாளர்கள் மற்றும் நீங்கள் விரும்பும் நபர்களுக்கு முன்பாக, நீங்கள் ஒரு Google Map ஆக இருங்கள்.


அடுத்து செய்ய வேண்டிய வளர்ச்சிக்கேற்ற காரியங்களை குறித்து மட்டுமே முயற்சி செய்வீர்கள் என்றால்,

வாழ்க்கை இனிமையாக இருக்கும்.


இனி நடக்க வேண்டிய நல்ல வழிமுறைகளைக் குறித்து மாத்திரம் பேச வேண்டுமே தவிர, நடந்து முடிந்த காரியங்களைக் குறித்துப் பழித்துப் பேசுவது முன்னேற்றத்திற்குரிய வழிமுறைகள் அல்ல.


...கர்த்தர் சொல்லுகிறதாவது:

முந்தினவைகளை நினைக்கவேண்டாம், பூர்வமானவைகளைச் சிந்திக்கவேண்டாம். 

ஏசாயா 43:18


இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன், இப்பொழுதே அது தோன்றும், நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன். 

ஏசாயா 43:19


மேசியாவின் ஊழியங்கள் 

+91-80724 87255