![]() |
ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு, வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு.
பிரசங்கி 3:2 |
வாழ்வில் வயதிற்கு ஏற்ற சாதனைகள்:
4 வயதில் உன் சாதனை என்பது,
உன் கட்டிலில் நீ நீர் கழிக்காமல்
இருக்கப் பழகிக்கொள்வதாகும்!
8 வயதில் உன் சாதனை என்பது,
வீட்டிற்கு வந்து சேரும் வழியை
நீ மிகச் சரியாக தெரிந்து கொள்வதாகும்.
12 வயதில் உன் சாதனை என்பது,
உனக்கென்று சில உண்மையான நண்பர்களை நீ சம்பாதித்துக் கொள்வதாகும்.
18 வயதில் உன் சாதனை என்பது,
ஓட்டுநர் உரிமம் கிடைப்பதாகும்.
23 வயதில் உன் சாதனை என்பது,
பல்கலைக்கழகத்தில் நீ பட்டம்
பெறுவதாகும்.
25 வயதில் உன் சாதனை என்பது,
உனக்கு ஒரு நல்ல மன திருப்தியான வேலை கிடைப்பதாகும்.
30 வயதில் உன் சாதனை என்பது,
ஒரு நல்ல குடும்பத் தலைவனாக நீ இருப்பதாகும்.
35 வயதில் உன் சாதனை என்பது,
நல்ல மரியாதை உள்ளவராக இருக்க வேண்டும் என்பதாகும்.
45 வயதில் உன் சாதனை என்பது,
உன் இளமையை நீ தக்க வைத்துக் கொள்வதாகும்.
50 வயதில் உன் சாதனை என்பது,
உன் குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்துக் கரை சேர்ப்பதாகும்.
55 வயதில் உன் சாதனை என்பது,
குடும்பக் கடமைகளை நல்ல முறையில் செய்து முடிப்பதாகும்.
60 வயதில் உன் சாதனை என்பது,
உன் ஓட்டுநர் உரிமத்தை மீண்டும் தக்க வைத்துக் கொள்ளவதாகும்.
65 வயதில் உன் சாதனை என்பது,
நோயின்றி வாழ்வதாகும்.
70 வயதில் உன் சாதனை என்பது,
மற்றவர்களுக்கு நீ பாரமாக இருக்காமல் இருப்பதாகும்.
75 வயதில் உன் சாதனை என்பது,
உனக்கு இன்னும் நல்ல நண்பர்கள் உன்னோடு இருப்பதாகும்.
80 வயதில் உன் சாதனை என்பது,
மீண்டும் வீட்டிற்கு வந்து சேரும் வழியை நீ மறக்காமல் இருப்பதாகும்.
85 வயதில் உன் சாதனை என்பது,
உன் கட்டிலில் மீண்டும் நீ சிறுநீர் கழிக்காமல் இருக்கப் பழகிக் கொள்வதாகும்.
இவ்வளவுதான் வாழ்க்கை...
ஆதலால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை இருந்தால் அவருக்கு விசுவாசமாக நடந்துகொள்ளுங்கள்!
இவற்றையெல்லாம் சாதிப்பதற்கு, தன்னம்பிக்கை மட்டும் போதாது; தெய்வ நம்பிக்கையும் துணை நிற்க வேண்டும்.
ஆகையால் விரும்புகிறவனாலும்அல்ல, ஓடுகிறவனாலும்அல்ல, இரங்குகிற தேவனாலேயாம்.
ரோமர் 9:16
இயேசு அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான், தேவனால் இதுகூடாததல்ல, தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.
மாற்கு 10:27
நீங்கள்
சாதிக்க வாழ்த்துக்கள் உடன்,
மேசியாவின் ஊழியங்கள்
+91- 80724 87255
